Wednesday, October 12, 2011

குழந்தைகளின் நோய் போக்கும் தவசி முருங்கை

தவசி முருங்கை மூலிகை மருத்துவத்திலும், உணவுத் தயாரிப்பிலும், பயன்படும் செடியாகும். இது சன்னியாசி முருங்கை எனவும் அழைக்கப்படுகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் இதன் துவர்ப்புச் சுவையுடையதான இலையே பயனுள்ளதாகும். இதன் இலை முருங்கையிலை போலவே இருந்தாலும் இது சிறு குத்துச்செடியாக வளரும். இது சாதாரணமாக அனைத்து மண்ணிலும் வளரும். இதன் இலை வறை செய்து உண்ணப்படுகிறது. மிகுந்த சத்துள்ள உணவாகக் கருதப்படுகிறது. இது பத்திய உணவாக சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

தவசி முருங்கைக்கு மூக்குத்த பூண்டு என்ற பெயருண்டு. இது குழந்தைகளுக்கு வரும் மாந்தம், தோஷம், வயிற்றுப்பிசம், பொருமல், செரியாமை, வயிற்றில் ஏற்படும் ஒருவகை வலி ஆகியவற்றைப் போக்கும் குணமுடையது. இதன் இலைச்சாற்றை உட்கொண்டால் மூக்கில் நீர்வழிதல், உள் நாக்கு இருமல், இரைப்பு போன்றவை குணமாகும்.

சளியை போக்கும்

மாந்தம், மார்ச்சளி, கணை இவைகளால் வருந்தும் போது இந்த மாத்திரை ஒன்றை எடுத்துச் சந்தனக்கல்லில் இழைத்துக் கொடுத்தால் மேற்கண்ட வியாதிகள் குணமாகும்.

தவசி முருங்கையிலை, ஒரு பிடியுடன் கொஞ்சம் உப்பையும், மிளகையும் சேர்த்து அரைத்துப் பிழிந்த சாற்றுடன் தேனும், சேர்த்து ஒரு தேக்கரண்டி வீதம் இருவேளை கொடுத்தால் வயிற்றுப்பிசம் உடனே தணியும். இதன் இலையுடன் பூண்டு, மிளகு இவைகளை சமமாகச் சேர்த்து அரைத்து ஒரு மாத்திரை செய்து வெயிலில் காயவைத்து பத்திரஞ் செய்யவும். ஜூரத்தால் கபம் கட்டி மூச்சுத்திணறி ஆயாசப்படும்போது தவசி முருங்கை இலையை அரைத்து சாறு பிழிந்து கொஞ்சம் துளசிச் சாறும் தேனும் கலந்து கொடுத்தால் சற்று நேரத்தில் கபம் கரைந்து மூச்சு தாராளமாய் விடமுடியும் காய்ச்சல் குணமடையும்.

கல்யாணமுருங்கை

கல்யாண முருங்கை என்பது ரணத்தைப் போக்கும் வல்லமையுடையது. புரையோடிய ரணம், ஆறாத ரணம், மேகரணம் இவைகளை ஆற்றும். கல்யாண முருங்கையும், கடைச்சரக்கையும் சேர்த்து காய்ச்சிய எண்ணெயை கண்டமாலை முதல் சொறி சிரங்கு வரை தடவலாம். ஆறாத நாள்பட்ட ரணம், தீப்பட்ட ரணம், கல் அடிபட்டது, வெட்டுக்காயம், மேகரணம் இவைகளுக்கு மேல்பூச்சாக தடவலாம். வெகு சீக்கிரம் நல்ல குணம் தரும்.

No comments:

Post a Comment