Friday, November 30, 2012

வெந்தயத்தில் மருத்துவம்
வெந்தயத்தில் மருத்துவம். 

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம்உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடுஅதில் உள்ள பல்வேறு மருத்துவக்குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும்வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லிஅளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள்பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள்தேவைப்பட்டால்கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வரஉடல் சூடுமலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.
தவிரஉடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம்ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டுவாணலியில்போட்டு வறுத்துஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள்வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போதுதண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன்சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வரவயிற்றுக் கோளாறுகள்அஜீரணம் போன்றவை ஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்வெறும்வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.
வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால்சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள்இருக்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில்வெந்தயம் – பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்குகட்டுப்படுத்தப்படும்.

மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும்சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால்வெந்தயப் பொடியை சிறிய வெல்லகட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.

எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும்வெந்தயப் பொடியையும்பெருங்காயப் பொடியையும் சேர்க்கசுவை கூடுவதுடன்உடல் உபாதைகளையும் போக்கும்.

இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில்வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால்சுவை கூடுவதுடன்உடலுக்கும் ஏற்றதாக அமையும்.
மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால்நீரிழிவுவயிற்றுப்புண்வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.
வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதுகோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறதுபிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால்சுரக்கும்.


1. இலைகளை தணலில் வதக்கி இளஞ்சூட்டுல பத்துப் போட வீக்கம் தீப்புண் குணமாகும்.

2. வெந்தயத்த நல்லா காயவச்சுப் பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி தொடர்ந்து சாப்பிட்டு வர மதுமேகம்(சர்க்கரை நோய்குறையும்.

3. வெந்தயம் 20 கிராம் எடுத்து 350 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைச்சு சாப்பிட இரத்தம் ஊறும்.

4. கஞ்சியில் வெந்தயத்த சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

5. வெந்தயத்த ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊறவச்சு நல்லா அரைச்சு தலைக்கு தேச்சு குளிக்க முடி உதிராம நல்லா வளரும்.

6. 5 கிராம் வெந்தயத்த நல்லா வேகவச்சுக் கடஞ்சு கொஞ்சம் தேன் சேர்த்துச் சாப்பிட தாய்ப்பால் பெருகும்.

7. வெந்தயம்கோதுமை ரெண்டும் சேர்த்து வறுத்து கஞ்சியாக்கி சாப்பிட உடல் வெப்பம் நீங்கும்.

8. வெந்தயம்கடுகுபெருங்காயம்கறிமஞ்சள் சமமா எடுத்து நெய் விட்டு வறுத்துப் பொடியாக்கி சாப்பிட்டில் கலந்து சாப்பிட வயிற்றுவலிபொருமல்ஈரலவீக்கம் குறையும்.

9. வெந்தயம்வாதுமைப் பருப்புகசகசாஉடைத்த கோதுமைநெய்பால்சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் வன்மையாவும்வலுவாவும் இருக்கும்இடுப்புவலி தீரும்.

10. வெந்தயத்த சீமை அத்திப்பழம் சேர்த்து அரைச்சு கட்டிகளுக்குப் பத்துபோட்டா கட்டி உடையும்படைகளுக்கும் பூசலாம்.

11. வெந்தயத்தையும் அரைச்சுத் தீப்புண்கள் மேல பூச எரிச்சல் குறையும்.

பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும் உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும்.

ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.

 வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சலி தணிந்து ஆறும்.

வெந்தியப்பொடியை ஒரு தேக்கரண்டியாக்க் காலை மாலை நீடித்துச் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.

வெந்தயத்துடன் சமன் சீமையத்திப் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில் குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்துஉடையும்.

இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊரவைத்துஅதிகாலை வெரும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீர்ழிவு நோய் சிறிது சிறிதாக வீரியம்குறையும்.

தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருதரிக்காது.
முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடுசெர்த்து அரைத்து சிறிது ஊர வைத்துத் தலை முழுகினால் பலன் கிட்டும்.

முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும் பருவும் குணமடையும்.

வெந்தயக்கீரை.
வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும்மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும்வயிற்றுஉப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கிஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சிகாலைமாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தாலகு உடல் சூடு தணிந்து சமப்படும்சீதபேதிகுணமாகும்வயிற்றுப் போக்கை நிறுத்தும்மாதவிடாய் தொல்லை நீங்கவும்உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்உடலுக்கு நல்ல பலம்தரும்.

வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கிகழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும்வெந்தயக்கீரைஇருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டிஎல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்கரைசேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து,ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது.  வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு செர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது வாய்ங்குவேக்காடு வராது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும்.
வெந்தயக்கீரையில்  வைட்டமின் சத்தியும்சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்புகண்பார்வை குறைவாதம்சொறிசிரங்குஇரத்தசோகை ஆகியவை குணமடையவும்,, பசியைப்போக்கவும் பயன்படுகிறது.

செக்ஸ் வாழ்க்கை முழு மகிழ்ச்சியுடன் இருக்க

பிரிஸ்பன் : வெந்தயம் , ஆண் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது . வத்தக்குழம்பில் ஆரம்பித்து ஊறுகாய் , மிளகாய்பொடி , மசாலா பொடி என பல வகையான இந்திய உணவுகளிலும் பயன்படுவது வெந்தயம் . சித்த மருத்துவத்தில் பல்வேறு வகையான நோய்களுக்கும் இதுமருந்தாக பயன்படுத்தப்படுகிறது . உடல் சூடு , வயிற்று புண் , வாய்ப்புண் ஆகியவற்றை வெந்தயம் கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது . சர்க்கரை நோய்பாதிப்பை குறைக்கும் மருந்தாக வெந்தய பவுடர் பயன்படுத்தப்படுகிறது .

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள் , ஆண் ஹார்மோன் உற்பத்தியில் வெந்தயத்தின் பங்கு தொடர்பாக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் உள்ளமருத்துவ ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது . நல்ல உடல்நலத்துடன் இருக்கும் 25&52 வயதினர் 60 பேர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர் .தினமும் 2 வேளை என ஒன்றரை மாதத்துக்கு அவர்களுக்கு வெந்தய சாறு கொடுக்கப்பட்டது . அவர்களது ஹார்மோன் அளவு , செக்ஸ் ஆர்வத்தில் ஏற்படும்மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன . இன்னொரு குரூப்புக்கு டம்மி சாறு கொடுக்கப்பட்டது
 .

வெந்தய சாறு கொடுத்தவர்களின் ஹார்மோன் அளவு 28 சதவீதம் உயர்ந்துள்ளது . வெந்தயத்தில் உள்ள சபோனின் பொருள் , ஹார்மோன் உற்பத்தியைஅதிகரிக்கிறது . உணவில் போதுமான அளவு வெந்தயம் சேர்த்துக் கொண்டால் செக்ஸ் வாழ்க்கை முழு மகிழ்ச்சியுடன் இருக்கும் என்கிறது ஆய்வு
__

ஆலிவ் எண்ணெயின் பயன்பாடுகள்.


ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் எலும்புகள் பலமாகும்ஆய்வில் தகவல்


ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் உள்ள எலும்புகள் பலமடையும் என்று நிபுணர்கள்தெரிவித்துள்ளனர். 

ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் A,D,E, K மேலும் பீட்டா கரோட்டின் மேலும் ஆன்டி ஆக்சிடன்கள்உள்ளதுஇது புற்றுநோய் வராமல் தடுக்கிறதுமேலும் ஆலிவ் எண்ணெயில் உள்ள மேனோஆன்சாச்சுலேரேட்டர்ஃபேட்டி ஆசிட் MUFA ஆனது கெட்ட கொழுப்புகளையும் மேலும் டிரைகிளிசரைட்ஸ்போன்றவைகளையும் இது குறைக்கிறதுஇது உயர் இரத்தம் அழுத்தத்தையும் இதய நோய்களையும்பாதுகாக்கிறது. 

ஆலிவ் ஆயிலில் மிக உயர்ந்த போலிக் அமிலம் உள்ளதுஇது மார்பகப்புற்றுநோயை வராமல் தடுப்பதுடன்,மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளதுஇதுசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும்எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வரவிடாமல் தடுக்கவும் கற்கள்உருவாவதையும் கட்டுப்பத்துகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமையலில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தும் பழக்கம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறுநாடுகளில் அதிகரித்து வருகிறதுஇந்நிலையில்ஆலிவ் எண்ணெயின் மருத்துவ குணம் தொடர்பாகஸ்பெயினின் கிரோனா பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வு நிறுவனம் சார்பில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.டாக்டர் ஜோசப் ட்ருயிட்டா தலைமையில் 2 ஆண்டுகள் இந்த ஆய்வு நடைபெற்றதுஆலிவ் எண்ணெய்எலும்புகளுக்கு வலுவளிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எலும்பு பாதிப்பால் அவதிப்படுபவர்கள் பட்டியல் மருத்துவக் குறிப்புகளில் இருந்து தயாரிக்கப்பட்டதுஇந்தஆய்விற்காக 55 முதல் 80 வயதுவரை உடைய 127 பேர் பங்கேற்றனர்அவர்களுக்கு ஆலிவ் எண்ணெயில்தயாரிக்கப்பட்ட உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டதுஇந்த ஆய்வின் போது எலும்புதொடர்பான பாதிப்புகளில் உள்ளவர்களின் எலும்புகள் வலுவடைந்து இருந்தது தெரியவந்ததுஇதனையடுத்துஎலும்புகளை உறுதிப்படுத்தும் குணம் ஆலிவ் ஆயிலுக்கு இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பக புற்று நோயை தடுக்கும்.

கட்டித் தங்கத்தின் விலை எட்டிப்பிடிக்க முடியாத அளவு உயரத்தில் இருக்கிறது. இப்பொழுது தங்கம் என்று கூற வாய் திறந்து மூடும் நேரத்தில் எவ்வளவு ஆயிரம்  விலை ஏறும் என்பது யாருக்கும் தெரியாது. இந்த நேரத்தில் என்ன விபரீத விளையாட்டுதிரவத்தங்கம் இருக்கிறதா என்று ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று கொலைவெறியுடன் பார்ப்பது தெரிகிறது. கூல் கூல். அந்தத் தங்கத்தை விடுங்க. நாம் வேறு தங்கத்தைப் பற்றி கொஞ்சம் பேசலாம்.

ஆலிவ் எண்ணெய்க்கும் தங்கம் என்று மற்றொரு பெயர் உண்டுங்கோ. ஆமாங்கோ. இது திரவ நிலையில் இருப்பதால் இதற்கு திரவத் தங்கம் என்று பெயர். ஆலிவ்  எண்ணெய் கண்களுக்குக் குளிர்ச்சியும்சருமத்திற்கு வெண்மையும்தலைமுடிக்கு போஷாக்கும் அளிக்கிறது என்பது பல நாட்களாக நாம் அறிந்த செய்தி… ஆனால் மார்பகப் புற்று நோய்க்கு மாமருந்து என்பது தற்போதைய ஆய்வு முடிவு.

ஆலிவ் ஆயில் விஹிதிகி (Mono Unsaturated Farty Acid) தேவையற்ற கொழுப்புகளையும்டிரைகிளிசரைட்ஸ்(Triglycerides)   ஆகிய வகைகளையும் குறைக்கவல்லது.

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால்மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன்,மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு அதனைக் குணப்ப டுத்துவதற்கும் உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்றும் கண் டறியப்பட்டுள்ளது. இதனை ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும்கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

பாலிஃபீனால் என்னும் திரவப்பொருள் ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டி எடுக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அது திடப் பொருளாக்கப்பட்டது. அத் திடப்பொருளான பாலிஃபீனால் கொண்டு நடத்திய ஆய்வில்,மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் அதில் இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவேமார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும்அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும்,ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம் என்று அறிவி த்துள்ளது.

இதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய் என்று இதனைச் சொல்கின்றனர். இதன் விலை என்ன அந்த  அளவிலா உள்ளது என்னும் வினாவும் பலரிடம் உள்ளது. அது  குறித்துச் சிந்திக்கும் முன்னர் புற்று நோய் வந்து சிகிச்சை எடுக்கும் செலவைக் குறித்துச் சிந்திக்க வேண்டி உள்ளது. முக்கியமாக புற்றுநோய் அறிகுறி உள்ளவர்கள்ஆரம்ப நிலை புற்று நோயாளிகள் ஆகியோர் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

ஏனெனில்இது கண்டிப்பாக மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் என்றும் கூறுகின்றனர். பெண்கள் நாள்தோறும் உணவில் 10 மேஜைக்கரண்டி வரை ஆலிவ் எண்ணெய்  சேர்த்துக் கொண்டால்மார்பகப் புற்றுநோயைத் தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

புற்றுநோயை உண்டாக்கும் ஜீன்களைத் தடுப்பதில் ஆலிவ் எண்ணெயின் பங்கு பற்றி பார்சிலோனாவின் ஆடனோமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத் தினர். முதலில் மனித உடலுக்குப் பொருத்தமான உயிரினமான எலியிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. தினசரி ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவை எலிகளுக்கு அளித்து  வந்தனர். கொடுத்து வைத்த எலிகள். ஆலிவ் உணவு அவற்றிற்கு.. அதில் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஜீன்களை ஆலிவ் எண்ணெய் அழித் தொழிப்பது தெரிய வந்தது. மேலும் மரபணுவை சேதம் ஏற்படாமல் பாதுகாப்பதிலும் பாலிஃபீனால் பெரும் பங்கு வகிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்மூலம்மரபணு பாதிப்பால் ஏற்படக்கூடிய மற்ற புற்றுநோய்களையும் ஆலிவ் எண்ணெய் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இதுபற்றி ஆராய்ச்சியாளர் எஜ §ர்ட் எஸ்ரிச் கூறுகையில், ‘‘பெண்கள் தினசரி உணவில் 10 மிலி முதல் 50 மிலி ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பகப் புற்றுநோயைத் தடுக்கலாம்’’என்றார்.  உலக அளவில் பெண்களின் உயிர் பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய்,அதைக் கட்டுப்படுத்த ஆலிவ் எண்ணெய் உதவும் என்றார்.

ஸ்பெயின் நாட்டில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில்ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய்ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும்  தவிர்க்கலாம் என்றார். இதயத்துக்கு ஏற்ற மிகச் சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெயைத்தான் (ளிறீவீஸ்மீ ளிவீறீ)  சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை  நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெயாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.

இந்த எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக் குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி  செய்துள்ளன.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால்ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம் என்கிறது மற்றொரு ஆய்வு.

ஆலிவ் மரத்தின் பழத்தின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். பழங்கள் உருண்டைநீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.  இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும்,அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். காய் பச்சை நிறத்திலும்கனிந்த பின் பழுப்புசிவப்பு அல்லது க ருப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும்வைட்டமின் ’,வைட்டமின் சி’ முதலான ஊட்டச்சத்துக்களும்  அடங்கியுள்ளன. இவ்விதையில் இருந்து எடுக்கப்படும். எண்ணெய் திரவத்தங்கம்’ என்று மருத்துவ உலகினரால் அழைக்கப்படுகிறது.

இவ்விதையில் இருந்து முதல் முறை வடிகட்டி எடுக்கும் கன்னி எண்ணெய் எக்ஸ்ட்ரா விர்ஜின் (EXTRA VIRGIN) எனப்படும். இந்த எண்ணெய் கலப்படமில் லாதது. இது நல்ல மணத்துடன் இருக்கும். (ஆனால் அந்த மணம் நமக்குப் பிடிக்குமா என்பதுதான் இங்கே கேள்வி) சுத்திகரிப்பு செய்துஇரண்டாம் முறை வடிகட்டும்  எண்ணெய் சற்று மணம் குறைந்ததாக இருக்கும். ஏனெனில்இது சுத்திகரிப்புக்கு உட்பட்டு கிடைப்பதால்.

மூன்றாம் முறை வடிகட்டப்படும் எண்ணெய்தான் இந்தியச் சந்தையில் கிடைப்பதாகக் கூறுகின்றனர். இதில் குறைந்த அளவே மணம் இருப்பதால் இதனையே மக்கள்  பயன்படுத்துவதாகவும் கன்னி எண்ணெயான முதல் முறை வடிகட்டும் எண்ணெயைஅதன் மணம் காரணமாகவும் அந்த எண்ணெயில் சமையல் செய்து சாப்பிட்ட பி ன்பு செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுக்கிறது என்பதாலும் இங்கே அதன் பயன்பாடு குறைவாக உள்ளது என்றும் கூறுகின்றனர்.

ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தும் போது அதன் சத்து குறையாமல் பயன்படுத்த நினைத்தால் அதனை அதிகமாகச் சூடாக்கக் கூடாது. கண்டிப்பாகப் பொரிப்பதற்கு  (Deep Fry)  ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்த இயலாது. இந்தக் காரணத்தினாலும் அதனைச் சமையலுக்குப் பயன்படுத்த முடிவதில்லை என்கின்றனர் பலர். நம்மவர்கள்தான் பஜ்ஜிபோண்டாவடை என்று எண்ணெயில் குளிக்கும் உணவுகளைப் பொரித்துக் (Deep Fry) கொறிக்கும் வழக்கம் உள்ளவர்கள் ஆயிற்றே.  அதனாலும் ஆலிவ் எண்ணெயின் பயன்பாடு அயல்நாடுகளை நோக்க இங்கே மிகக் குறைவே. நம்மவர்கள் பெரும்பாலும் சமையல் முடித்த பிறகு அதன் மீது ஆலிவ் எண்ணெயை டிரஸ்ஸிங் போல சிறிதளவு சேர்த்துப் பயன்படுத்துகின்றனர்.

ஆலிவ் எண்ணெயைக் காலையில் இரு சொட்டுகள் வாயில் இட்டு நன்கு ஆயில் புல்லிங் செய்துவிட்டு வெளியில் துப்பாமல் முழுங்கிவிட்டால் வயிற்றில் அமிலம்  சுரப்பது (Acidity)  அறவே நீங்கி விடும் என்று ஆலிவ் எண்ணெய் சூப்பர் மார்க்கெட் கூறுகிறது. 10 சொட்டு ஆலிவ் எண்ணெய் சிறுநீர்ப்பையில் ஏற்படும் நமைச்சல்கல் போன்றவற்றை அகற்றி விடும் என்றும் விளம்பரம் செய்துள்ளது.

அதிக வெளிச்சமும் அதிக சூடும் ஆலிவ் எண்ணெயின் ஆயுளைக் குறைத்து விடும். (கெட்டுப் போவதற்கு வாய்ப்புண்டு) அதனால் ஆலிவ் எண்ணெயை மிதமான சூடும் மிதமான வெளிச்சமும் உள்ள இடத்தில் வைத்துப் பாதுகாப்பது நல்லது.

ஆலிவ் எண்ணெய் பயன்பாடு: 10 ஆயிரம் டன்னாக உயரும.

புதுடில்லி:மருத்துவக் குணம் நிறைந்தஆலிவ் எண்ணெய் பயன்பாடுஇந்தியாவில் சிறப்பான அளவில்வளர்ச்சி கண்டு வருகிறதுஎனவேநடப்பாண்டில்உள்நாட்டில் இதன் பயன்பாடு, 10 ஆயிரம் டன்னாகஅதிகரிக்கும் எனமதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாகஆலிவ் எண்ணெய் பயன்பாடுபடிப்படியாகஉயர்ந்து வருகிறதுகடந்த 2010ம் ஆண்டில்இந்தியாவில் ஆலிவ் எண்ணெய் பயன்பாடு, 4,000 டன்னாக இருந்தது.

இதுசென்ற 2011ம் ஆண்டில், 6,000 டன்னாக உயர்ந்துள்ளது எனஇந்திய ஆலிவ் எண்ணெய் சங்கம்வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.முன்புஆலிவ் எண்ணெய் மசாஜ் உள்ளிட்டவெளிப்புற பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வந்ததுதற்போதுஇந்த எண்ணெய்சமையலறையில்உணவுப்பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறதுஆலிவ் எண்ணெய்இத்தாலிஸ்பெயின்நாடுகளில்இருந்துதான்இறக்குமதி செய்யப்படுகிறது.
 
சர்வதேச அளவில்ஆலிவ் எண்ணெய் உற்பத்தி, 32 லட்சம் டன் என்ற அளவில் உள்ளதுஇதில்மேற்கண்ட இருநாடுகளின் பங்களிப்பு மட்டும், 90 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2003ம் ஆண்டில்இந்தியாவில்,ஆலிவ் எண்ணெய் பயன்பாடு மிகவும் குறைந்து காணப்பட்டதுஅதேசமயம்சீனாவில்இதன் பயன்பாடு, 30ஆயிரம் டன் என்ற அளவில் உள்ளதுசர்வதேச அளவில்மற்ற சமையல் எண்ணெய்களுடன் ஒப்பிடும் போது,இதன் பயன்பாடு குறைவாக உள்ளதுஎன்றாலும்தற்போதுமக்களின் செலவிடும் வருவாய் உயர்ந்துவருவதால்ஆலிவ் எண்ணெய் பயன்பாடும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

ஆலிவ் எண்ணெயில் ஏராளமான சத்துகள் அடங்கி இருப்பதை இன்றைய ஆராய்ச்சி முடிவுகள்தெரிவிக்கின்றன 1400 வருடங்களுக்கு முன்பே அவைகளில் அதிக சத்துகள் இருப்பதாகவும் அவைகளைஉங்களுக்காகவே (மனிதர்களின் நலன் கருதியே உருவாக்கியதாகவும் அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.இனிவரும் காலங்களில் இதன் ஆராய்ச்சியில் இன்னும் பல நன்மைகள் அடங்கி இருப்பதை கண்டு பிடித்துஅறிவிக்கலாம்.

6:141. படர விடப்பட்டமற்றும் படர விடப்படாத தோட்டங்களையும்பேரீச்சை மரங்களையும்மாறுபட்டஉணவான தானியங்களையும், (தோற்றத்தில்ஒன்று பட்டும் (தன்மையில்வேறு பட்டும் உள்ள மாதுளைமற்றும் ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான்அவை பலன் தரும் போதுஅதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்)கடமையை வழங்கி விடுங்கள்வீண் விரையம் செய்யாதீர்கள்வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்கமாட்டான்.

16:11. அதன் மூலம் பயிர்களையும்ஒலிவ மரம்பேரீச்சைதிராட்சை மற்றும் அனைத்துக் கனிகளையும்உங்களுக்காக அவன் முளைக்கச் செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்றுஇருக்கிறது.

Saturday, May 19, 2012

ருசிக்காக சாப்பிடாதீங்க... பசியோட சாப்பிடுங்க!

வயிற்றுப் பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். அதனால் தான் ஔவையார் கூட பசிப்பிணி என்றார். பசிக்கும் போது சாப்பிடவேண்டும். ஆனால் தட்டு நிறைய உணவு இருந்தும் அதை சாப்பிட சிலருக்கு பசி எடுக்காது. பசிக்கா விட்டால் கூட அதுவும் ஒரு நோய்தான். பசியின்மைக்கு பல பிரச்சினைகள் உண்டு. ஜீரணமண்டலத்தை சீராக்கி நன்றாக பசிக்க உணவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

ருசிக்காக சாப்பிடாதீங்க

ருசி என்பது நாவின் சுவை நரம்புகளுக்கு மட்டும்தான் தெரியும். ருசிக்கிறது என்பதற்காக கண்டதையும் அள்ளிப்போட்டுக்கொள்ளாதீர்கள். கடைசியில் அதுவே ஜீரணகோளறுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச் சத்துக்கள் அவசியம். எனவே உங்கள் உணவு தினமும் ஒரே வகையானதாகவோ, ஒரு வேளையில் ஒரே உணவு மட்டுமோ இருக்கக்கூடாது. தினசரி உணவுடன் கூடுதலாக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் இறைச்சி, கோழி, மீன் மற்றும் பிற தானிய உணவுகள் இவைகளில் ஏதாவது ஒன்றிரண்டை கூடுதலாக சேர்த்து சாப்பிடுங்கள்.

சுழற்சி முறையில் சாப்பிடுங்கள்

சத்தான உணவுகளையே சுவையானதாக சமைத்து சாப்பிடலாம். வழக்கமான காய்கறிகளானாலும் கொஞ்சம் வித்தியாசமான தயாரிப்பு முறையில் சமைத்து சாப்பிடுங்கள். சிலருக்கு புதுப்புது உணவுகளை சுவைத்துப் பார்ப்பது பிடிக்கும். அடிக்கடி புதிய உணவுகளை சேர்த்தால் ஜீரண நேரம் மாறுபடுவதால் பசிப்பதில் பிரச்சினைகள் வரலாம். வழக்கமான உணவுகளை சுழற்சி முறையில் சாப்பிடுவது எளிதான ஜீரணத்திற்கு வழிவகுக்கும். வழக்கமான நேரத்திற்கு பசியையும் தூண்டும்.

உடல் மேலாண்மை

உங்கள் எடை சரியானதா என்பது பாலினம், உயரம், வயது மற்றும் பாரம்பரியம் உட்பட பல விஷயங்களை சார்ந்திருக்கிறது. உடல் எடை அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் பல வியாதிகள் ஏற்படும். சராசரியான உடல் எடையை மேலாண்மை செய்வது உடல் நலத்திற்கும், உணவு பழக்க வழக்கத்திற்கும் நல்லது.

அளவாக சாப்பிடுங்கள்

உடல் ஆரோக்கியமாக இருக்க மிதமான அளவில் உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அளவாக சாப்பிடுவதுதான் சரியான நேரத்திற்கு பசியைத் தூண்டும். உங்களுக்குப் பிடித்த உணவை கூடுதலாக சாப்பிடுவதும், மற்ற உணவுகளை தேவையைவிட குறைவாக எடுத்துக் கொள்வதும் உடலுக்கு தீங்கு தரும். இது பசியின்மையையும், உணவின் மீது வெறுப்பையும் ஏற்படுத்தக்கூடும்.

நொறுக்குத்தீனி வேண்டாம்

சேர்க்க வேண்டிய உணவுகளை சேர்ப்பதும், தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்ப்பதும் சிறப்பான உணவுப் பழக்கமாகும். உடல் நலத்தில் அக்கறை காட்டும் பலரும் அதிக ஊட்டச்சத்துள்ள உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஒவ்வொருவர் உடலுக்கும் தேவையான சத்துக்கள் மாறுபடும். எனவே உணவு ஆலோசகரின் பரிந்துரைப்படி சத்தான உணவுகளை சேர்க்கவும், அவசியமற்ற நொறுக்குத் தீனி போன்ற உணவுகளை குறைக்கவும், தவிர்க்கவும் செய்யுங்கள்.

சத்துள்ள உணவுகள்

எல்லா உணவுகளும் அவசியமானதும், சத்தானதும் அல்ல. ஒருமுறை கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொண்டால் மறுமுறை அந்த சத்துக்கள் குறைவாக உள்ள உணவை உண்ண வேண்டும். அதேபோல ஒரு சத்தான உணவை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அடுத்த முறை அந்த உணவை அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உணவியல் நிபுணர்கள் கூறிய இந்த ஆலோசனைகளை பின்பற்றினால் நேரத்திற்கு பசிக்கும். சத்தான உணவுகளை நேரத்திற்கு சாப்பிடலாம்.