Sunday, October 30, 2011

நோய்களை நீக்கும் நீல ஆம்பல்

நீல நிறத்தில் காணப்படும் ஆம்பல் மலர்கள் பண்டைய காலம் தொட்டு நோய் நீக்கும் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எகிப்தியர்கள் ஆம்பல் மலரை உடல் ஆரோக்கியத்திற்காக மட்டுமின்றி உற்சாகமளிக்கும், சக்தி தரும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தியுள்ளனர். இந்த ஆம்பல் மலரின் கிழங்கு கிடைத்தற்கரியது. இது வியக்கத்தக்க மருத்துவ பலன்களைக் கொண்டுள்ளது.

நீர் நிலைகளில் மலர்ந்திருக்கும் ஆம்பல் மலர்கள் தாமரையைப் போன்று நீர்மட்டத்திற்கேற்றபடி தண்டினைப் பெற்றிருக்கும். இதில் பலவகை உள்ளன. ஒவ்வொன்றும், ஒவ்வொர வகையான நிறங்கள் கொண்ட பூக்களைக் கொண்டிருக்கும். சிவப்பு, நீலம், வெண்மை, மஞ்சள், போன்ற நிறங்களைக் கொண்ட பூக்களாக இருக்கும். இவை அனைத்துமே ஒருவகையான மருத்துவ குணங்களை கொண்டவைதான். இதில் உள்ள கிழங்கு துவர்ப்புச் சுவையுடன், காணப்படும். குளிர்ச்சியை தரவல்லது. சத்துக்கள் நிறைந்ததும் கூட.

ஆண்களுக்கான மூலிகை

ஆம்பல் கிழங்கு இதயம் மற்றும் மூளைக்கு வலுவூட்டும் நரம்புகளுக்கு இது சக்தியை தரவல்லது. சிறுநீரகத்திற்கு இது பலத்தைக் கொடுக்கும். தாதுக்களை உற்பத்தியாக்கி, கெட்டிப்படுத்தும். ஆண்களுக்கு இது சிறந்த மூலிகையாகும். இதனால் ஆண் உறுப்பு பலம் பெறும். இது இரத்தம் தொடர்புடைய நோய்க்களையும் நீக்க வல்லது. பித்தம் தொடர்பான தொல்லைகளையும் போக்கும். உள் ரணங்களை குணமாக்கும் திறம் இதற்கு உண்டு.

கண் எரிச்சல் போக்கும்

ஆம்பல் கிழங்கை நன்றாக காயவைத்து இடித்து சூரணமாக்கி வைத்துக்கொண்டு பசும்பாலில் கலந்து சாப்பிடலாம். இதனால் உடல் சூடு தொடர்புடைய நோய்கள் தீரும். கண் எரிச்சல், கண் பொங்குதல், நீர்வடிதல் போன்ற தொல்லைகள் நீங்கும். சிலருக்கு அதிக உஷ்ணத்தினால் உடல் முழுவதும் எரிச்சலாக இருக்கும். இதனால் அதிக தாகமும் இருக்கும். இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்பல் கிழங்கின் சாறு, ஆம்பல் பூவின் சாறுடன் சிறிதளவு தேன் குழைத்துச் சாப்பிட்டு வர பூரண குணமாகும்.

No comments:

Post a Comment